ஆழிப்பேரலையின் பத்தாவது ஆண்டு நினைவு நிகழ்வு வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள ஆழிப்பேரலை நினைவிடத்தில் நடைபெற்றது. வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையும் பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டு கழகமும் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர்.
நினைவிடத்தில் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவரகளுக்கு நினைவேந்தல் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன அதனை தொடர்ந்து பொதுநோக்கு மண்டபத்தில் நினைவுரைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மத குருமார்கள் மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோநோகதரலிங்கம், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான சி.சிவமோகன், ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உபபிதா சந்திரகுலசிங்கம் (மோகன்) அரசியல் கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் நரசிங்கர் ஆலய நிர்வாக சபையினர் என பலர் கலந்து கொண்டனர்.















