வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் அரச கட்சிக்கு தாவல்!!

578

Mahinda

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மூவரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் தாம் அரசுக்கு ஆதரவளிப்பதாக இன்று(26.12) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான திரு.ராஜசேகரம்(சேகர்), திரு.சுபாகரன்(பாபு), திரு.பார்த்தீபன், மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த திரு.இ.பிரசாத் ஆகிய நால்வருமே இன்று காலை தாம் அரசுக்கு ஆதரவளிப்பதாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஐ.தே.கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் திரு. இ.பிரசாத் அவர்கள் வவுனியா நெற் இணையத்திற்கு தொடர்புகொண்டு தெரிவித்தார். மேலும் தாங்கள் நால்வரும் அரசிற்கு ஆதரவு தெரிவித்ததற்கான காரணங்களை நாளை ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.