மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் அனைவரும் விடுதலை!!

594

Maldives

மாலைதீவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சகல இலங்கையர்களையும் விடுதலை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லெண்ணத்தை வளர்க்கும் நோக்கில் மாலைதீவு அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்தள்ளது.

இதனடிப்படையில் மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 பேர் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். மாலைதீவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமையவாக இந்த தீரமானம் எடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதியின் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானம் குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.