அமைச்சுப் பதவி குறித்து ஆராய்ந்து முடிவெடுப்போம் : சுமந்திரன் எம்.பி!!

580

TNA

தேசிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவியேற்றுக்கொள்ளும்படி புதிய பிரதமர் விடுத்த அழைப்பு குறித்து பின்னர் ஆராய்வதாக கூட்டமைப்பு தெரிவித்த போது அழைப்பு குறித்து உடனடியாக மீள் பரிசீலனை செய்யும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

எது எப்படியிருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதைக்கு எந்தவித அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இது குறித்து நாங்கள் தீவிரமாக ஆராய்ந்த பின்னரே முடிவெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.