ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை இன்று (12.01) மாலை ஆறு மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று மாலை ஆறுமணிக்கு ஆரம்பமான புதிய அமைச்சரவை நியமனமும் சத்தியபிரமானமும் தற்போது இடம்பெற்றுவருகிறது .
இடைக்கால அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் 10 அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் மற்றும் 25 பிரதி அமைச்சர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தற்போது சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
புதிய அமைச்சரவை விவரங்கள்
ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம்
ஜோன் அமரதுங்க- கிறிஸ்தவ அமைச்சு
மங்கள சமரவீர- வெளிவிவகார அமைச்சு
கரு ஜயசூரிய- புத்தசாசனஅமைச்சு
ஜோசப் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு
காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சு
லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு
ரவி கருணாநாயக்க- நிதி அமைச்சு
றவூப் ஹக்கீம்- நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சு
சம்பிக்க ரணவக்க- மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சு
ராஜித சேனாரத்ன- சுகாதார அமைச்சு
துமிந்த திஸாநாயக்க- நீர்ப்பாசன அமைச்சு
கபீர் ஹாசிம்- நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு எம்.கே.டி.எஸ். குணவர்தன- காணி அமைச்சு
சஜித் பிரேமதாச- வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சு
விஜேதாச ராஜபக்ஷ- நீதி அமைச்சு
கஜயந்த கருணாதிலக- ஊடகத்துறை அமைச்சு
அர்ஜூன ரணதுங்க- துறைமுக அமைச்சு
ரிஷாத் பதியுதீன்- கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு
அகிலவிராஜ் காரியவசம்- கல்வி அமைச்சு
டி.எம்.சுவாமிநாதன்- மீள்குடியேற்ற இந்து மதவிவகார அமைச்சு
ரஞ்சித் மதுமபண்டார- போக்குவரத்து அமைச்சு
தலத்தா அத்துகோரள- வெளிநாட்டு வேளைவாய்ப்பு அமைச்சு
சந்திராணி பண்டார- பெண்கள் விவகார அமைச்சு
பி.திகாம்பரம்- பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சு







