வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்த சுவாமி விவேகானந்தரின் 153 பிறந்ததின நிகழ்வு புகையிரத வீதியில் ஹட்டன் நேஷனல் வங்கிக்கு திருப்பும் வீதியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் சிலை அடியில் சிலை பராமரிக்கும் ஹட்டன் நேஷனல் வங்கியின் அனுசரணையில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் 12.01.2015 இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா, நகரசபையின் செயலாளர் திரு க.சத்தியசீலன், ஹட்டன் நேஷனல் வங்கியின் முகாமையாளர் திரு அருணன், இலங்கை வங்கி நகர கிளை முகாமையாளர் திரு ரோய் ஜெயக்குமார், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாசன், இறைபணிச் செம்மல் வை.செ.தேவராசா, பிரதேசசபை உறுப்பினர் சிவம், சுத்தானந்த இந்து இளைஞர் சங்க தலைவர் நா.சேனாதிராசா, வடக்கின் வசந்தம் இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் திருமதி மைதிலி தயாபரன், சமுக ஆர்வலர்கள் விக்னா, பால, பிரதாபன், பபிந்தன், வரதன், வில்வராசா உட்பட வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
சுவாமி விவேகானந்தரின் பெருமைகளை தமிழ் மணி அகளங்கன் அவர்கள் நயம்பட உரைத்தார் இந்துவாக இருந்தாலும் மற்ற மதத்தின் மேல் அவர்கொண்ட பற்றையும்.இளைஞர்களின் விழிப்புணர்வுக்காக அவர்மேற்கொண்டசேவைகளையும்,அமெரிக்க சிக்காகோவில் 1893.09.11இல் நடந்த உலக சர்வசமய மகாநாட்டில் சீமான்களே, சீமாட்டிகளே (லேடீஸ் & ஜென்டில்மன் ) என்று உரை நிகழ்த்தாமல் சகோதர, சகோதரிகளே என உரை நிகழ்த்தி அனைவரயும் பரவசபடுத்திய பெருமையும் அவரையும் சாரும் என அவர் பெருமைகளை நயம்பட கூறினார் .
பின்னர் உரை நிகழ்த்திய இன்தமிழ் இனியன் எஸ் எஸ் வாசன் அவர்கள் மாணவர்கள் குறைந்த பட்சம் சுவாமி விவேகானந்தரை பற்றி 10 வசனமாவது தெரிந்து இருக்க வேண்டியே மாணவர்களை அழைத்து வந்ததாகவும் இந்த நிகழ்வுகளில் ஒவ்வொரு பாடசாலையிலும் இருந்து 10 மாணவர்களை அனுப்பி அவர்களுக்கு தமிழ் பெரியார்களின் அறிவை புகட்ட வலய கல்வி பணிப்பாளர் திருமதி அன்டன் சோமராஜா அவர்கள் ஆர்வமாக இருப்பதாகவும் இனி வரும் காலங்களில் இந்த பெரியார் நினைவு தினங்களில் மாணவர்களை பங்கு பெற்ற தான் வழிசமைபதாகவும் தன்னிடம் தெரிவித்ததாக தெரிவித்தார் .
இறுதியில் சந்திரகுமார் (கண்ணன் ) அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.