யாழில் நீதிமன்றத்திற்கு முன்பாக இரு இளைஞர்கள் மீது வாள் வெட்டு!!

614

Knif

மல்லாகம் நீதிமன்றத்திற்கு முன்பாக இரு இளைஞர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக வந்திருந்த இரு இளைஞர்கள் அதை முடித்துக் கொண்டு வீடு திரும்புவதற்காக வெளியில் காத்திருந்த நிலையில், இனந்தெரியாதோரின் வாள் வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தனர்.

சம்பவத்தில் சுதுமலை மானிப்பாயைச் சேர்ந்த மகாராசா துஷாந்தன் (20), ஸ்ரீகரன் ஸ்ரீசங்கர் (24) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தெல்லிப்பழைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.