ஊவா மாகாண புதிய முதலமைச்சராக ஹரின் பெர்ணான்டோ பதவியேற்பு!!

655

Harin

ஊவா மாகாணசபை முதலமைச்சராக ஐக்கிய தேசியக்கட்சியின் ஹரின் பெர்ணான்டோ இன்று பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். ஆளுநர் நந்தா மெத்யூ முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் சற்றுமுன்னர் இடம்பெற்றது.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சசீந்திர ராஜபக்ச முதலமைச்சராக செயற்பட்டு வந்தார். இந்தநிலையில் மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து ஊவா மாகாணசபையிலும் ஐந்துபேர் எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர்.

இதனையடுத்து ஊவா மாகாணசபையில் ஐக்கிய தேசியக்கட்சியில் 17 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 15 உறுப்பினர்களும் என்ற அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டது இதனை எதிர்கட்சி தலைவராக இருந்த ஹரின் பெர்ணான்டோ ஆளுநரிடம் நேற்று அறிவித்திருந்தார்.

இதனடிப்படையிலேயே ஆளுநர் இன்று ஹரின் பெர்ணான்டோவுக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைத்துள்ளார்.