கட்டுநாயக்க – மத்தள விமான சேவைகள் நிறுத்தம்!!

584

Mathala

கட்டுநாயக்க – மத்தள இடையில் நடத்தப்பட்டு வந்த உள்ளூர் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமான சேவை காரணமாக நஷ்டம் ஏற்படுவதால், அதனை நிறுத்த தீர்மானித்தாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் எதர்வரும் திங்கட்கிழமை முதல் மத்தள விமான நிலையத்திற்கான உள்ளூர் விமான சேவைகள் இடைநிறுத்தப்படும்.

நஷ்டத்தில் இயங்கும் உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தப்படும் என விமான சேவைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

அதேவேளை ஸ்ரீலங்கன் விமான சேவையினால் மேற்கொள்ளப்படும் பயணிகள் குறைவான விமான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.