ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ஊழியர் சங்கக் கிளை அலுவலகம் இன்று(17.01) வவுனியா, இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போவில் திறந்து வைக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் றோகண கமகே மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணதாச ஆகியோரால் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் எஸ்.அஸ்கர், இலங்கை போக்குவரத்து சபையின் சாலை முகாமையாளர் எஸ்.சந்திரன் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.