யாழ் – கொழும்பு பஸ்ஸில் தீ விபத்து!!(படங்கள்)

570

யாழ் – கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பஸ் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை 5 மணிக்கு தீடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது. கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வத்தளைக்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த பஸ் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், பஸ்ஸில் 36 பயணிகள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

எனினும் குறித்த விபத்துச் சம்பவத்தில் பயணிகள் எவருக்கும் எதுவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

-பாஸ்கரன் கதீசன்-

1 25  4