தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு இன்று(18.01) புகையிரத நிலைய வீதியில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, ம.தியாகராசா, சிவகரன் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
“ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இன் நிகழ்வில் புதிய ஆட்சி மாற்றம், அதில் தமிழர்களின் பங்களிப்பு, தமிழர்களின் எதிர்கால அரசியல் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
மேலும் பல ஆலயங்களுக்கு ஒலிபெருக்கிகள், கதிரைகள், விளையாட்டுக் கழகங்களுக்கு அவர்களுக்கான T- சேர்ட் என்பன வழங்கப்பட்டன.
-மதுஜன்-













