கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயமாயிருந்த பல வீதிகள் திறப்பு !

355

images (4)

கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த வீதிகள் பலவும் நேற்று முதல் பொதுமக்கள் போக்குவரத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியின் உத்தரவிற்கு இணங்க பொதுமக்கள் பாதுகாப்பு, கிறிஸ்தவ மதவிவகாரம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் திறந்துவைக்கப்பட்டது.

இதற்கு முன் பஸ், லொறி, பாரவூர்திகளுக்காக மூடப்பட்டிருந்த பௌத்தாலோக மாவத்தை, ஸ்ரான்லி விஜேசுந்தர மாவத்தையில் இருந்து தும்முல்ல சந்தி வரையான வீதிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் இதுவரைகாலமும் முழுமையாக மூடப்பட்டிருந்த ஜனாதிபதி மாவத்தை, ஸ்ரீமத் பாரன் ஜயதிலக மாவத்தை, சதாம் வீதி, முதலிகே மாவத்தை வீதிகள் இலகுரக வாகனங்களுக்காக மாத்திரம் திறக்கப்பட்டுள்ளன. இவ்வீதியில் லொறி, பஸ்,  டிரக்டர், கொள்கலன்கள் பயணிக்க முடியாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்