அமெரிக்க அப்பிளை உண்ணாதீர்கள் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!

488

Apple

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அப்பிள் பழங்களை சந்தையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அப்பிள்களில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற, மக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் பக்ரீரியாக்கள் காணப்படுவதாக அந்த நாட்டின் உணவுத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளமையே இதற்குக் காரணம் என அவர் கூறியுள்ளார்.

தற்போது பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு அப்பிள் இறக்குமதி செய்யப்படுகின்றது.

அவற்றில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை எவை என சரியாக அடையாளம் காண முடியாவிடின் உண்ணாதிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.