வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயம் திறந்துவைப்பு!!

559

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டகாரியாலயம் தாயகம் என்ற பெயரில் நேற்று சனிக்கிழமை (24.01.2015) காலை 11 மணிக்கு வவுனியா குருமன்காட்டுபகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த அலுவலகத்தை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா திறந்துவைத்தார். இவ் காரியாலயம் திறப்பதற்கு கட்டடத்தை கட்சியின் உறுப்பினர் மாசிலாமணி றோய் ஜெயக்குமார் இலவசமாக வழங்கியிருந்தார்.

வடமாகாண சபை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உட்பட கட்சியின் பிரமுகர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

1 2 3