மார்பில் பந்து தாக்கியதால் உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்!!

518

Ball

பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியின்போது பந்து தாக்கி, வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் கராக்கி அருகேயுள்ள ஓரங்கி நகரில் கிளப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அப்போது வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வீசிய பந்து, 18 வயது இளம் வீரர் ஜீஷன் முகமதுவின் மார்பகப் பகுதியை தாக்கியது.

அதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மற்ற வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.