இலங்கையின் 45 வது பிரதம நீதியரசராவாரா கே.ஸ்ரீபவன்??

878

Sribhavan

இலங்கையின் 45 வது பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் சட்டவிரோத நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட 43 வது பிரதம நீதியரசர் இன்று மீண்டும் அந்த பதவியில் கடமையாற்றியதுடன் ஒருநாளில் ஓய்வுபெறுகிறார்.

44 வது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட மொஹான் பீரிஸ் இன்னும் பதவியை ராஜினாமா செய்யவில்லை. எனினும் அவரது நியமனம் சட்டவிரோதமானது என இலங்கையின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், நாளைய தினம் புதிய பிரதம நீதியரசராக ஸ்ரீபவன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் சர்ச்சையான சூழ்நிலையில், அவர் பிரதம நீதியரசராக பதவியேற்பதில் தயக்கம் காட்டி வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.