யாழில் வாள்வெட்டுச் சம்பவத்தில் 3 பேர் படுகாயம்!!

447

Vall

யாழ். கற்கோவளம் புனிதநகர் பகுதியில் காணி தொடர்பான வாய்த் தர்க்கம் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக மூவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நகுலன் சுஜாதா (25), சதீஸ் உசாந்தினி (22), திருச்செல்வம்(26) ஆகியவர்களே படுகாயம் அடைந்துள்ளனர். வாள்வெட்டின் சந்தேக நபரை கைது செய்ய பருத்திதுறை பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.