யாழ்.பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் எனக்கோரி பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீரழிந்த அரசியல் கலாச்சாரத்தால், சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம், முறைகேடுகள் தொடர்பில் நீதியான விசாரணை தேவை, பல்கலையில் முறையற்ற நியமனங்களை நிறுத்து, பல்கலைக்கழக நிர்வாகத்தை தூய்மையாக்குவோம், வெளிவாரி பேரவை உறுப்பினர்களே வெளியேறுங்கள், கடந்த கால சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணை தேவை, நிதி மோசடிகள், ஊழல்கள் தொடர்பில் விசாரணை வேண்டும் என இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.








