பிரபல தமிழ் நடிகை திரிஷா. இவருக்கும், பட அதிபர் வருண் மணியனுக்கும் சமீபத்தில் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் உள்ள சென்னை அணியை பட அதிபர் வருண் மணியன் வாங்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாயின. ஆனால் அதற்கு வருண் மணியன் அது வெறும் வதந்திதான் என்று ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார்.
இதற்கிடையில் சென்னை தேனாம்பேட்டை பொலிஸ் நிலையத்தில் வருண் மணியன் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘‘சென்னை அணியை விலைக்கு வாங்கக்கூடாது. வாங்கினால் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பலர் தொலைபேசி மூலம் எனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று வருண் மணியன் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக தேனாம்பேட்டை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






