ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானம் ஈரானில் அவசரமாகத் தரையிறக்கம்!!

490

srilankan

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானமொன்று ஈரானின் தெஹரான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

யு.எல்.563 என்ற விமானம் இவ்வாறு அவரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட இருதய நோய் காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

நோயாளி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின் விமானம் மீண்டும் பாரிஸ் நகர் நோக்கிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.