வவுனியாவில் பலத்த காற்றுடன் மழை : வாகனங்கள் சேதம்!!

564

வவுனியாவில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழையினால் நகரின் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா நகரசபைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த பேரூந்து ஒன்று பலத்த சேதமடைந்ததுடன், துவிச்சக்கர வண்டிகள் சிலவும் சேதமடைந்துள்ளது.

நகரின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததாகவும் இதனால் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

-மதுஜன்-

2 4 5 6