பிரபல நகைச்சுவை நடிகர் செல்லத்துரை மரணம்!!

883

Chelladurai

பிரபல நகைச்சுவை நடிகர் செல்லத்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். பல படங்களில் வடிவேலுவுடன் கொமடி காட்சிகளில் நடித்தவர் செல்லத்துரை.

இவரின் வயது 74. சில நாட்களாகவே சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.