உலகக்கிண்ணப் பயிற்சிப் போட்டியில் சிம்பாப்வேயிடம் தோல்வியடைந்த இலங்கை அணி!!

392

Zimbabwe

இலங்கை – சிம்பாப்வே அணிகள் மோதிய உல­கக்­கிண்ண பயிற்­சிப்­போட்­டியில் சிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி­பெற்­றுள்­ளது.

11ஆவது உலகக் கிண்ணத் தொடரை முன்­னிட்டு பயிற்சி போட்டிகள் நடை­பெற்று வரு­கின்­றன. அந்­தவகையில் இன்று நியுசிலாந்தின் பெர்ட் சட்கில்பி ஓவல் மைதானத்தில் நடை­பெற்ற பயிற்சிப் போட்­டி யில் இலங்கை – சிம்பாப்வே அணிகள் மோதி­ன.

நாண­யச்­சு­ழற்­சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன் படி களமிறங்கிய இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணிசார்பாக கருணாரத்ன 58 ஒட்டங்களையும் ஜீவன் மெண்டிஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
சிம்பாப்வே அணி சார்பாக பந்துவீச்சில் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 280 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிங்கிய சிம்பாப்வே அணி இலங்கை அணியின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டு வெற்றி இலக்கை அடைந்தது.

சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை 45.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

சிம்பாப்வே அணி சார்பாக மசஹட்ஸா ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களை டெய்லர் 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.