111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி!!

821

Aus

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் அவுஸ்திரேலியா 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் தொடங்கியது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த ‘ஏ’ பிரிவு இரண்டாவது லீக் போட்டியில், அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

50 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 342 ஓட்டங்கள் எடுத்தது. 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

23வது ஓவரில் 99 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்த இங்கிலாந்து, முடிவில் 41.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.