வவுனியா கனகராயன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

465

Accident

பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளை மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி சென்ற பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற மோட்டார் சைக்கிளை மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

இந்த விபத்து கனகராயன்குளம், மன்னகுளம் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றது. விபத்தில் உயிரிழந்தவரது சடலம் வவுனியா வைதியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.