வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)

562

இன்று (19.02) பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்தார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..

வவுனியா, ஓமந்தை பறைநாட்டாங்கல் பகுதியில் உள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளை யாழப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் மோதித்தள்ளியதில் அதில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்தார்.

மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தில் ஓமந்தை அரசமுறிப்புக் குளத்தைச் சேர்ந்த கந்தசாமி திருக்குமரன் (27) என்பவரே படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புக் கடவையின் காவலாளி பாதுகாப்புக் கடவையை மூடாதமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

1 2