வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!

1064

Accident

வவுனியாவில் இன்று(21.02) இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா ஏ9 வீதியில் விவசாயப்பண்ணை அருகில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது பின்புறமாக வந்த வான் ஒன்று மோதியதனாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

சாஸ்திரிகூழாங்குளம், வவுனியாவைச் சேர்ந்த 60 வயதுடைய கந்தையா தர்மலிங்கம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.