ரயில் விபத்தில் தந்தை பலி : மகள் படுகாயம்!!

583

Acci

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு தந்தை உயிரிழந்ததுடன், மகள் படுகாயமடைந்துள்ளார்.

இன்று காலை கண்டி நீதிமன்ற வளாகத்தின் அருகிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் விபத்தில் படுகாயமடைந்த மகளின் நிலை கவலைகிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.