நடப்பு உலகக்கிண்ணத் தொடருடன் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் மஹேல ஜெயவர்த்தன ஓய்வு பெறவுள்ளார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சதம் அடித்த ஜெயவர்த்தன, உலகக்கிண்ண தொடரில் அதிக சதம் அடித்தவர் பட்டியலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
37 வயதான ஜெயவர்த்தன உலகக்கிண்ண தொடர்களில் பெற்றுக்கொண்ட நான்காவது சதம் இதுவாகும்.
இதன் மூலம் உலகக்கிண்ண போட்டிகளில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (6), அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (5) ஆகியோருக்கு அடுத்தபடியாக, ஜெயவர்த்தன இடம்பிடித்துள்ளார்.
இந்தியாவின் சவுரவ் கங்குலி, அவுஸ்திரேலியாவின் மார்க் வோக் (தலா 4 சதம்) உள்ளிட்டோருடன் மூன்றாவது இடத்தை ஜெயவர்த்தன பகிர்ந்து கொண்டுள்ளார்.






