வவுனியாவில் சாரணர் ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்!!(படங்கள்)

790

சாரணர் இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் பேடன் பவல் பிரபுவின் 158வது பிறந்த தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும் திரி சாரணர் குழுவும் இணைந்து 08வது மாபெரும் இரத்ததான முகாமொன்றை நடாத்தியிருந்தனர்.

இவ் இரத்ததானமுகாம் ஜனாதிபதி சாரணர் மன்ற தலைவரும் உதவி மாவட்ட ஆணையாளருமான திரு.சு.காண்டீபன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 1.00 மணிவரை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

பேடன் பவல் பிரபுவை நினைவுகூறும் முகமாக அவரது திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன. தொடர்ந்து பல குருதிக்கொடையாளிகளின் பங்களிப்புடன் இரத்ததான நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட சாரணர் ஆணையாளார் திரு.ம.ச.பத்மநாதன், நிகழ்வின் பிரதான அனுசரணையாளரும் சுபாஸ் அச்சக உரிமையாளருமான திரு.சுபாஸ்கரன்,இரத்த வங்கி வைத்திய அதிகாரி, ஊழியர்கள், சாரண உதவி மாவட்ட ஆணையாளர்களான திரு.தற்பரன், திரு.ஜதீஸ்கரன், திரு.காண்டீபன், ஜனாதிபதி சாரணர்கள், திரி சாரணர்கள், பாடசாலை சாரணர்கள், குருதிக்கொடையாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 1110