30 மணப்பெண் தோழிகள், 103 மணமகன் தோழர்களுடன் நடைபெற்ற வினோத திருமணம்!!

865

பிரித்தானியாவில் அதிகளவு மணப்பெண் தோழிகளும் மணமகன் தோழர்களும் பங்கேற்ற ஆடம்பர திருமணம் ஒன்று நடந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவின் வட யோக்‌ஷோவரில் உள்ள ருட்டிங் பார்க் என்ற ஹொட்டலில் அலெக்ஸ் சிமொன்ஸ்- அமி எவிங்(32-26) என்ற ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணத்தில் 130 மணப்பெண் தோழிகள், 103 மணமகன் தோழர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் மூலம் அதிகளவில் மணப்பெண் தோழிகள் பங்கேற்ற திருமணம், அதிகளவில் மணமகன் தோழர்கள் பங்கேற்ற திருமணம் ஆகிய இரு உலக சாதனைகளை படைத்துள்ளனர்.

மேலும் அவர்கள் கனடாவில் கடந்த 2013ம் ஆண்டில் 126 மணப்பெண் தோழிகள் பங்கேற்ற திருமண ஜோடியின் கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

W1 W2 W3 W4