துபாயில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் ஓடியோடி அள்ளிச் சென்றனர். துபாயின் ஜுமைரா பகுதியில் இருக்கும் வீதியில் சூறாவளிக் காற்று வீசியபோது, திடீர் என 500 திர்ஹம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான நோட்டுகள் சாலையில் பறந்து வந்தது.
அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடியோடி பணத்தை அள்ளினர். வாகன ஓட்டுனர்கள் அனைவரும் கை நிறைய பணத்தை எடுத்துச் சென்றனர். அந்த பணம் எங்கிருந்து பறந்து வந்தது, யாருடையது என்றே தெரியவில்லை.
சுமார் 2 முதல் 3 மில்லியன் திர்ஹம் வரை காற்றில் பறந்து வந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று மக்களை விரட்டினர், மேலும் இந்த பணம் எங்கிருந்தது வந்தது என விசாரணை நடத்தி வருகிறார்கள்.







