நட்சத்திர ரசிகர்கள் சண்டையில் எங்களை இழுக்காதீர்கள் : தனுஷ் ஆவேசம்!!

477

Danush

அனேகன் படத்தின் ப்ரோமோஷனுக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். சமூகவலை தளங்களில் ரசிகர்களின் சண்டை பற்றி கேட்டதற்கு, எல்லா ரசிகர்களும் எனக்கு வேண்டும் என்னுடைய ரசிகர்களுக்காக மட்டும் நான் படம் நடிக்கவில்லை.

அதேநேரத்தில் இந்த ரசிகர்கள் சண்டை பார்க்கும் பொது ரொம்ப மன வருத்தமாக உள்ளது, அதிலும் வேறு இரு ரசிகர்கள் சண்டையில் சம்பந்தமே இல்லாமல் எங்களையும் இணைத்து பேச வேண்டாம். இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானது அல்ல என்று கூறி தன் மன வருத்தத்தை கூறினார்.