வவுனியாவில் உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் பயிற்சிநெறிகள் ஆரம்பமாகின்றன!!

594

SLIT

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் உயர் தேசிய டிப்ளோமா பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இலங்கை உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கை உயர் தொழில் நுட்பவியல் கல்விநிறுவகம்(SLIATE) தனது பிராந்திய கற்கை நிலையமான உயர் தொழில் நுட்பவியல் நிறுவத்தினை((ATI) ) வவுனியாவில் நிறுவியுள்ளது.

A9 வீதி ஓமந்தையில் அமைக்கப்பட்டுள்ள இதன் புதிய கட்டிடடத் தொகுதியில் மார்ச் மாதத்தில் புதிய பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

2015ம் கல்வியாண்டிற்கான மூன்று புதிய உயர் தொழில்நுட்ப டிப்ளோமா பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர் வரும் 16.03.2015அன்று உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா– (HNDA) உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா– (HND in English) மற்றும் உயர் தேசியதகவல் தொழிநுட்படிப்ளோமா– (HNDIT) பயிற்சி நெறிகள் இந்த நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளதாக அதன் இணைப்பாளர் அறிவித்துள்ளார்