ஊனமுற்ற மாணவிக்கு 180 மில்லியன் நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு!!

923

Girl

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து ஊனமுற்ற வைத்திய பீட மாணவிக்கு 180 மில்லியன் நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2008 தேசத்திற்கு மகுடம் இடம்பெற்றபோது கண்காட்சி பார்த்துக் கொண்டிருந்த கண்காட்சிகூடம் இடிந்து வீழ்ந்து சமிதா சமன்மலி என்ற அப்போதைய வைத்தியபீட மாணவி ஊனமுற்றார்.

குறித்த மாணவி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் (பிஎம்ஐசிஎச் நிர்வாகி) மாணவிக்கு 180 மில்லியன் நட்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.