பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக இரும்பு கவசம் அணிந்து நடமாடிய இளம் பெண்!!

337

Capture

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான ஈவ் டீசிங் மற்றும் பொது இடங்களில் துன்புறுத்தல் ஆகியவை அதிகரித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு இளம் பெண் இரும்பு கவமசம் அணிந்து பொது இடங்களில் நடமாடினார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆண்களின் பாலியல் துன்பறுத்தலுக்கு எதிராக அந்த இளம் பெண் இரும்பு கவச உடை அணிந்து மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் நடமாடினார்.

அந்த பெண்ணின் பெயர் விவரம் தெரியவில்லை. இது நடந்தது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில். பல ஆண்கள் சுற்றி நிற்க அந்த பெண் நடந்து செல்வது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த பெண் காபூல் நகரின் மேற்கு பகுதியில் உள்ள கர்டி-3 பகுதியில் நடமாடி உள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களான பேஸ்புக் , டுவிட்டரில் பகிரபட்டு உள்ளது.

முஸ்லீம் பழமை வாதம் உள்ள காபூலில் இளம்பெண்ணின் எதிர்ப்பு போராட்டம் கலவையான ஒரு எதிர்வினையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலர் இந்த பெண்ணின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து உள்ளனர். ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய கலாசாரத்தை செயல்படுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

சிலர் துணிச்சலான தைரியமான பெண் என பாராட்டி உள்ளனர்.சிலர் துருக்கியை சேர்ந்த மின்னிஜின் புரவுன் போல் தைரியமான பெண் என பாராட்டி உள்ளனர்.