தெஹிவளை தனியார் வங்கியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 10 லட்சம் கொள்ளை!!

459

Robbery

தெஹிவளை – அத்திட்டிய பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றிற்குள் புகுந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி 10 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

முகத்தை முழுமையாக மறைத்து தலைகவசம் அணிந்து வந்த இருவரே இவ்வாறு பணம் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (03.02) பகல் 1.45 அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது காயமடைந்த வங்கி பாதுகாவலர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முழுமையாக முகத்தை மறைத்து தலைக்கவசம் அணிய எதிர்வரும் மார்ச் 21ம் திகதி தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.