ஹிந்தி நடிகையை திருமணம் செய்ய போகும் ஹர்பஜன் சிங்!!

525

Harbajan

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது நீண்டநாள் காதலியான நடிகை கீதா பஸ்ராவை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கீதா பஸ்ரா சில ஹிந்தி மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹர்பஜன்சிங், கீதாவும் நீண்ட காலமாக காதலித்து வருவதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வந்த போதிலும் அதனை இருவருமே மறுத்து வந்தனர்.

இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்பஜன் சிங் விளையாடும் போது கீதாவும் போட்டிகளை பார்வையிட வருவார்.

இந்நிலையில் இருவரும் இம்மாத இறுதியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.