வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் பௌர்ணமி கலை விழாவும் 17 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று(04.03) வியாழக்கிழமை இடம்பெற்றது.
கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாருதம் சஞ்சிகை வெளியீடும் இடம்பெற்றிருந்தது. இதேவேளை வவுனியா மாவட்டத்தில் கலை இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றிய மூத்த கலைஞர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

















