திரிஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் : இணையத்தில் பரவும் புதிய புகைப்படம்!!

468

Trisha

தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா.இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் இவர் படப்பிடிப்பின் போது, முகத்தில் மாஸ்க் அணிந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

மேலும், அவர் தற்போது பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

த‌னக்கு பன்றிக்காய்ச்சல் ஏதும் இல்லையென்றும், தான் நலமாக இருப்பதாகவும், முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் திரிஷா தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு பிரபல இந்தி நடிகை சோனம் கபூர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.