யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் படுகாயம்!!

810

Vaal

யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கலட்டி சந்திப் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இளைஞர் ஒருவர் முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் துரத்தித் துரத்தி வெட்டிக் காயப்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு 8.30 மணியளவில் இளைஞர்கள் சிலர் முச்சக்கர வண்டி ஒன்றில் துரத்திச் சென்றுள்ளனர். இவ்வாறு துரத்திச் செல்லப்பட்ட நபர் வீடு ஒன்றினுள் புகுந்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் வீட்டினுள் புகுந்து அந்த இளைஞரை வெட்டியுள்ளனர்.

கலட்டியைச் சேர்ந்த ப. கஜன்(21) என்பவரே இவ்வாறு வெட்டிக் காயப்படுத்தப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.