கணவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் நடிகை ரதி பொலிஸில் புகார்!!

779

Rathi

புதிய வார்ப்புகள், முரட்டுக்காளை, உல்லாசப் பறவைகள், ஏக் துஜே கே லியே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள ரதி அக்னிஹோத்ரி தனது கணவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிரபல கட்டிட வடிவமைப்பாளர் அனில் விர்வானி என்பவரை கடந்த 1985ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரதி, தெற்கு மும்பையில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வருகிறார். சமீப காலமாக கணவர் தன்னை அடித்து, உதைத்து, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி வருவதாக மும்பை பொலிஸில் அவர் புகார் அளித்துள்ளார்.

தற்போது 51 வயதாகும் ரதியின் மகன் தனுஜ் என்பவரும் சினிமாவில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது