கணவனை அடித்தே கொன்ற மனைவி!!

515

wife

இரத்தினபுரி – தபுலுவத்தை பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனை அடித்துக் கொன்றுள்ளார். நேற்று இரவு (14.03) இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

44 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

சந்தேகநபர் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.