வவுனியா செட்டிக்குளம் கோட்டத்துக்குட்பட்ட 35 பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி செட்டிக்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் செட்டிக்குளம் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.யேசுதாசன் தலைமையில் நேற்று (16.03) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முத்தலிப்பாவா பாறூக், வடமாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா ஆகியோரும்,
இவர்களுடன் செட்டிக்குளம் பிரதேசசபை தவிசாளர் அந்தோனி, உறுப்பினர் ஜெகதீஸ்வரன், செட்டிக்குளம் மக்கள் வங்கி முகாமையாளர் ஜனாப் அறூஸ், உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் ஜனாப் சுபைர், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் யுட் பரதமாறன்,
அருட்தந்தை அலெக்ஸ்சாண்டர் வெனோ, ரங்கநாத குருக்கள் , கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதிய தலைவர் திரு.அன்ரனிற்றோ, செட்டிக்குளம் மகாவித்தியாலய பழைய மாணவன் எட்வின் இருதயராஜ் ஆகியோரும், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.





















