சாதாரண பயணிகள் விமானத்தில் சீனா சென்ற ஜனாதிபதி மைத்திரி!!

819

Maithiri

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவிற்கு சென்றுள்ளனர்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த பயணத்தில் இந்தியா சென்றது போன்று இம்முறையும் பயணிகள் விமானத்தில் சீனா நோக்கிச் சென்றுள்ளார்.

யு.எல்.868 என்ற சாதாரண பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று (25.03) பகல் 1.30 அளவில் சீனாவின் தலைநகர் பீஜிங் நோக்கிச் சென்றுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின் சீனாவிற்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.