மீண்டும் வருகிறது தலைக்கவசத் தடை!!

632

Helmet

மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் முகத்தை முழுமையாக மறைத்து தலைக்கவசம் அணிய தடை விதிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி இத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார்.

முன்னதாக முகத்தை முழுமையாக மறைத்து தலைக்கவசம் அணிய தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்து பின்னர் அதனை வாபஸ் பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அத்திட்டத்தை செயற்படுத்த தீர்மானித்துள்ளது.