சிகிரிய மலை ஏறுவதற்கு இனி இயங்கு ஏணி!!

837

Sigiriya

சுற்றுலா பயணிகளின் நலன் கருதி சிகிரிய மலை ஏறுவதை இலகுபடுத்துவதற்காக இயங்கு ஏணி முறையை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கலை, கலாச்சார இராஜாங்க அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிகிரியாவிலுள்ள கற்களுக்கு சேதம் விளைவிக்காத வகையில் தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்களின் அறிவுரைகளுக்கமைய இவ் இயங்கு ஏணி பொருத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இயங்கு ஏணியை பயன்படுத்தவதினால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளும் சிகிரியாவிற்கு வருகை தரக் கூடும் என அமைசச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.