வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் பதினோராவது நாள் கைலாச வாகன உற்சவம் !(படங்கள், வீடியோ)

434

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்பதினோராம்  நாள் 30-03 -2014  திங்கட்கிழமைகைலாச வாகன  உற்சவம் இடம்பெற்றது.

கைலாச வாகன உற்சவம் கொண்டாடபடுவதன் கைங்கரியம்  என்னவெனில் இராவணன் தனக்கு சமனாக யாருமே இருக்கக் கூடாது அந்தப் பரம்பொருளேயாயினும் என்று அகங்காரம் பட்டு, அந்தப் பரம்பொருளை கயிலையில் இருக்கும் சிவபெருமானாகக் கருதி அந்தக் கையிலயையே அசைத்து தனது அதிகாரத்தை அங்கு நிறுவ முயன்று ஓர் தேரில் மிக விரைவாக சென்றான் இராவணன்.

அப்போது அந்த தேர்பாகன் அதை கண்டு பொறுக்காது இயலாமையும் உணர்ந்து , அந்தக் கைலாயம் மீது இந்த தேர் செல்லாது என்பதோடு அவ்வாறு செலுத்துவது தருமமும் அன்று என்று மொழிவான். அதனை கேட்டும் மனம் திருந்தாது, அந்தப் பாகனை சினந்து இன்னும் விரைவாக செலுத்துக என்றான். இவ்வாறு மிக விரைவாக சென்று கைலையை அடைந்து சிவபெருமான் பார்வதியோடு இருக்கும் கயிலாய மலையை அசைக்க கருதி எடுக்க, அது கண்டு சிவபெருமான் சிறிதே தன் விரலால் நசுக்க, நசியுண்டு தலையில் இருந்த கிரீடம் உடம்பு எல்லாம் நெடு நெடுவென தளர்ந்து விழ , அவனும் அலறி தன் தவற்றினை உணரத்தான். இப்படிப்பட்ட வல்லமை மிக்க இறைவனை இன்றைய நிலையில் நினைவு கூர்ந்து கைலாச வாகன காட்சி திருவிழா கொண்டாடப்படுகிறது .

வழமை போன்று மாலையில் மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜ ராஜாராம் குருக்கள் தலைமையில் அபிசேகங்கள் பூஜைகளின் நிறைவில்  எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  கைலாச வாகனத்திலும்  விநாயகர் இடப வாகனத்திலும்  வள்ளி தெய்வானை சமேத  முருகபெருமான்  இடபவாகனத்திலும் திருவீதி உலா வந்த காட்சியும் இடம்பெற்றது.

11102716_521109388029633_540587162620216732_n

11083650_521110194696219_7138604255399794509_n

11081360_521107854696453_2163034877903045958_n

11077844_521109101362995_3526623749019404989_n 11075301_521108928029679_1046599432804031886_n 11071822_521108121363093_2288777598622020357_n

10986452_521109724696266_2991610718089334929_n 10981737_521109444696294_4628631467101313957_n 10953908_521109031363002_3076297376133649185_n 10422187_521109204696318_3912359869818839418_n 10308067_521110428029529_2934480443247886413_n 1526764_521108548029717_918036686071985141_n 9302_975170055836281_3019661997682608243_n