வவுனியாவில் மாணவி தூக்கில் தொங்கி மரணம்!!

615

Hang

வவுனியா, பட்டக்காடு பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று மாலை வவுனியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா, பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த பரமானந்தம் வனஜா (16) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.